மாரியம்மன், பகவதியம்மன் கோயில் விழா
ADDED :4117 days ago
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு அருகே உள்ள அழகுசமுத்திரப்பட்டியில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் ஆகிய சுவாமிகளின் திருவிழா உற்சவம் நடந்தது. ஜூன் 24 அன்று சாமி சாட்டுதலுடன் தொடங்கி, தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. ஜூலை 1 இரவு சுவாமி கண் திறப்பு நடந்து வானவேடிக்கை முழங்க கொலுமண்டபம் அடைந்தது. நேற்று காலை மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய வைபவங்கள் நடந்தது. திருவிழாவில் பக்தர்கள் தீக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் சுவாமி கங்கை சென்றடைவதோடு விழா நிறைவடைகிறது.