உலகளந்த பெருமாள் கோவிலில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் தரிசனம்!
ADDED :4225 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணிக்கு நடக்கிறது. இதனையடுத்து ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள் நேற்று காலை கோவிலுக்கு வருகை புரிந்தார். சுவாமி தரிசனத்தை முடித்து, கோவில் திருப்பணி ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். இதனையடுத்து விஸ்தார மண்டபத்தில் உபன்யாசத்தில் அருளாசி வழங்கினார். ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரியர் உட்பட பலர் உடனிருந்தனர்.