கைலாசநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்!
விழுப்புரம்: விழுப்புரம் பிரகன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று ( 4ம் தேதி) நடக்கிறது. விழுப்புரம் பி ரகன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் ஜீருணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த 30ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு வேதபாரா யணம், விசேஷ சாந்தி, யாக சாலை பூஜை, நாடிசந்தனம், தத்வார்ச்சனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து இன்று (4ம் தேதி) அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், சங்கல்பம் நடக்கிறது. பின்னர் காலை 7:30 மணி முதல் 8:15 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் கும்பாபிஷேகம், காலை 8:25 மணி முதல் 9:00 மணிக்குள் கைலாசநாதர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம், பக்தர்களுக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் வீதியுலா நடக்கிறது.