அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED :4117 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ரிஷிவந்தியத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆனி மாத பிரம்மோற்சவ திருவிழா நேற்று முன் தினம் இரவு 8.00 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி கடந்த 1ம் தேதி விக்னேஷ்வர பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு 8:15 மணியளவில் ÷ காவில் வளாகத்தில் கொடியேற்றினர். வரும் 10ம் தேதி பகல் 12 மணியளவில் முதல் சாத்துப்படி, தீபாராதனை செய்து பகல் 3:00 மணியளவில் தி ருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. தினம் இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.