உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழண்டி அம்மன் கோவிலில்9ம் தேதி மகா கும்பாபிஷேகம்

பழண்டி அம்மன் கோவிலில்9ம் தேதி மகா கும்பாபிஷேகம்

திருப்பந்தியூர்; திருப்பந்தியூர், பழண்டி அம்மன் கோவிலில், வரும் 9ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பந்தியூர் ஊராட்சி. இங்கு பழண்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, கோவிலில் உள்ள பழண்டி அம்மன் விமான கோபுரம், விநாயகர், நாகாத்தம்மன் பலி பீடம் ஆகியவற்றிற்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், வரும் 9ம் தேதி, காலை 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது. முன்னதாக, 8ம் தேதி, காலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. அதன்பின், காலை 8:00 மணிக்கு, கரிகோலமும், மாலை 5:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, கோ பூஜை, கும்பலங்காரம், புண்யாவாசனம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. அதன்பின், 9ம் தேதி, காலை 6:00 மணிக்கு, ஹோம பூஜையும், 9:30 மணிக்கு கலச புறப்பாடும், காலை 10:00 மணிக்கு விநாயகர், நாகாத்தம்மன் மற்றும் பழண்டி அம்மன் விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். இரவு 8:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !