உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜூலை 9ம் தேதி திருமலைக்கோடி நாராயணி கோவில் கும்பாபிஷேகம்

ஜூலை 9ம் தேதி திருமலைக்கோடி நாராயணி கோவில் கும்பாபிஷேகம்

வேலூர்: திருமலைக்கோடி நாராயணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை, 9ம் தேதி நடக்கிறது. வேலூர் அடுத்த, திருமலைக்கோடி நாராயணி பீடத்தில், சக்தி அம்மா நிருபர்களிடம் கூறியதாவது: திருமலைக் கோடியில் உள்ள, நாராயணி அம்மன் கோவிலுக்கு, இரண்டாவது கும்பாபிஷேகம் வரும், 9ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை (இன்று) கணபதி பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. நாளை மறுநாள் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது. ஜூலை, 6ம் தேதி பஞ்ச பூதங்களை சந்தோஷப்படுத்தும் சாந்தி ஹோமம் நடக்கிறது. அன்று மாலை முதல்கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து, 7, 8 தேதிகள் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதில், தமிழகத்தின் பிரபல கோவில்களில் இருந்து, 45 சிவாச்சாரியார்கள் கலந்து கொள்கின்றனர். 8ம் தேதி மாலை வேலூர் கோட்டை மைதானத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.இந்தியாவின் புண்ணிய நதிகளான காவிரி, கங்கை, நர்மதை, நாராயணி, நேபாளத்தில் உள்ள கண்டகி உள்பட பல ஆறுகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசங்களில் வைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. இதற்காக, 108 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வேலூர் கோட்டையில் இருந்து நாராயணி அம்மன் கோவிலுக்கு ஊர்வலம் புறப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகøயில், கரகம், பொய்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம் நடக்கிறது. ஸ்ரீபுரம் தங்கக் கோவில் பக்தர்கள் முளைப்பாரி உள்பட மங்களப் பொருட்களை கைகளில் எடுத்துக் கொண்டு ஊர்வலத்தில் செல்கின்றனர். இரவு, 9 மணிக்கு ஊர்வலம் நாராயணி அம்மன் கோவிலை அடைகிறது. ஜூலை 9ம் தேதி காலை, ஆறாம் கால பூர்ணாஹூதி முடிவடைகிறது. காலை, 10 மணி முதல், 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, ஒன்பது யாக குண்டங்களும், பரிவாரங்களுக்கு, ஒன்பது யாக குண்டங்களும் வைத்து, 108 கலசங்கள் வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !