உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தயார்!
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் இன்று காலை மூலவிமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உல களந்தபெருமாள் கோவில் திருவிக்ரமன் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட முக்கிய சன்னதிகள், மூலஸ்தான விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள் நடக்கிறது. நேற்று புண்யாகவாசனம், ஹோமங்கள், நவகலச ஸ்தாபனம், சதுர்தச கலச மகா சாந்தி திருமஞ்சனம், மகா சாந்தி பூர்ணாகுதி, பிம்ப ரக்சாபந்தனம், பிரதான ஹோமங்கள் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், சகஸ்ராகனாதி பாரமாத்மிக ஹோமம், யத்தேவாதி ஹோமம், மகா பூர்ணாகதி, யாத்ராதானம் முடிந்து கடம் புறப்பாடாகி 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மூலகலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.