உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர், மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

சித்தி விநாயகர், மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

துறையூர்: துறையூர் அருகே கிருஷ்ணாபுரம் சக்தி நகரில் உள்ள சித்தி விநாயகர், மகா சக்தி மாரியம்மன், பாலமுருகன் சுவாமிகளுக்கு புதியதாக கல் விக்ரகம், உற்சவ விக்ரகம், புதிய கோபுரம், மகா மண்டபம் கட்டி, கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கணபதி ஹோமம், பழைய மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து காவிரி தீர்த்தம் கொண்டு வந்தனர். யாக சாலை பிரவேசம் செய்து பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, 7 மணிக்கு கடம் புறப்பாடும், 7.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில், சர்வசாதகத்தை கீரம்பூர் கஸ்தூரி ரெங்கன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !