உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியஅய்யன் கோவில் கும்பாபிஷேகம்!

பெரியஅய்யன் கோவில் கும்பாபிஷேகம்!

சூலுார் : அருகம்பாளையம் ஸ்ரீபெரிய அய்யன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 9ம்தேதி நடக்கிறது. சூலுார் அடுத்த அருகம்பாளையம் பெரிய அய்யன் கோவில் பழமையானது.இங்கு திருப்பணிகள் நடைபெற்று, வரும் 7ம்தேதி காலை 5.00 மணிக்கு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. 8ம்தேதி காலை முதற்காலஹோமமும், மாலை இரண்டாம்காலமும் நடக்கிறது. 9ம்தேதிகாலை 6.15 மணி முதல் 7.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !