உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம்!

திருவள்ளூர் தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம்!

திருவள்ளூர்: பூங்கா நகரில் உள்ள, யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.திருவள்ளூர், காக்களூர் அடுத்த, பூங்கா நகரில் யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் வியாழக்கிழமை தோறும், யோக ஞான தட்சிணாமூர்த்திக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு அபிஷேகம் துவங்கியது. பால் அபிஷேகம் முடிந்ததும், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !