தர்மபுரி கும்பாபிஷேகம்!
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அன்னசாகரத்தில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, கடந்த, 2ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல் கால யாகபூஜை நடந்தது. 3ம் தேதி இரண்டாம் காலயாக பூஜை, கோபுரம் கலசம் வைத்தல், மூன்றாம் காலயாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதியும், 9 மணிக்கு மேல், 9.30 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடந்தது.ஸ்ரீ பாலசுப்பிரமணிய சிவாச்சாரியர் தலைமையில், சிவாச்சாரியர்கள் கோபுரகலசத்துக்கு புனித நீர் ஊற்றினர். 10 மணிக்கு மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 11 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, தொழிலதிபர் அர்ச்சுணன், சுமதி, அரவிந்தன், முன்னாள் கவுன்சிலர் பூக்கடை ரவி, ராஜாத்தி, மற்றும் விழாக்குழுவினர் பக்தர்கள் செய்திருந்தனர்.