உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி ஆனி திருமஞ்சன விழா!

தர்மபுரி ஆனி திருமஞ்சன விழா!

தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, கடந்த, 2ம் தேதி மாணிக்கவாசகர் குருபூஜை மற்றும் திருவீதி உலா நடந்தது. 3ம் தேதி அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகரின் திருவீதி உலா நடந்தது. நேற்று, ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, அதிகாலை, 4 மணிக்கு நடராஜருக்கு, மஹா அபிஷேகம் மற்றும் தங்ககவசம் சாத்துபடி நடந்தது. 10.30 மணிக்கு நடராஜ உற்சவருக்கு, வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், திராட்சை உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.மதியம், 1 மணிக்கு பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7 மணிக்கு, திருஆபரண அலங்காரகாட்சி அம்மையப்பன் திருநடன திருவீதி உலா, கோபுரதரிசனம் நடந்தது. ஏற்பாடுகளை, ஆனி திருமஞ்சன விழாக்குழுவினர் மற்றும் செங்குந்த சிவனேய செல்வர்கள் செய்திருந்தனர். தர்மபுரி நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, மூலவர் மகாலிங்கேஸ்வரர் உற்சவர் நடராஜ பெருமானுக்கு, பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மாலையில், ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !