உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவில் ஓராண்டு நிறைவு விழா!

கைலாசநாதர் கோவில் ஓராண்டு நிறைவு விழா!

இடைப்பாடி: பூலாம்பட்டி, கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து, ஓராண்டு நிறைவு பெறுவதால், கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.பூலாம்பட்டியில், கைலாசநாதர், வரதராஜ பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேக விழா, கடந்தாண்டு ஜூலை 14ம் தேதி நடந்தது. கும்பாபிஷேகம் நடந்த நாளின் திதியான நேற்று, ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 108 சங்காபிஷேகம், 108 கலச அபிஷேகம் செய்யப்பட்டது.இறையருள் நற்பணி மன்ற திருப்பணிக்குழு தலைவர் பாப்பி, செயலாளர் கணேசன், பொருளாளர் முருகேசன், பேரூராட்சி கவுன்சிலர் கோவிந்தன், உழவர் மன்ற அமைப்பாளர் நடேசன் மற்றும் பலர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !