உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் புகைப்பட கண்காட்சி!

நெல்லையப்பர் கோயிலில் புகைப்பட கண்காட்சி!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் புகைப்பட கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தற்போது ஆனித்திருவிழா நடந்துவருகிறது. வரும் 10ம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் பத்து நாட்களும் கோயில் வளாகத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதன்முறையாக கோயிலின் பழங்கால நினைவுகளை மீட்கும் விதமாக புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான படங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கோயில் கோபுரம் வண்ணப்பூச்சுக்கு வராத முந்தைய கருப்பு வெள்ளை காலத்து ஓவியங்கள், கோயில் விழாவிற்கு திருமுருக கிருபானந்த வாரியார் வந்துசென்றது, முந்தைய கும்பாபிஷேகம்,தேரோட்டம், தற்போது உள்ளது போல நெருக்கடி இல்லாத சுவாமி சன்னதி வீதி, நாயக்கர் காலத்து சிற்பங்களை மெருகேற்றும் கருப்புவெள்ளை புகைப்படங்கள் என ரம்மியமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !