பூஜாரிகளுக்கு நலவாரியம் வேண்டும்: விஸ்வ ஹிந்து பேரவை வேண்டுகோள்!
வத்திராயிருப்பு : பூஜாரிகளுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என, விஸ்வ ஹிந்து பூஜாரிகள் பேரவை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பூஜாரிகள் பேரவையின் மாவட்ட குழு கூட்டம் வத்திராயிருப்பில் நடந்தது. ஒன்றிய அமைப்பாளர் சாமிமலை தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் பூமாலை வரவேற்றார். கூட்டத்தில் "பூஜாரிகள் அரசின் பல்வேறு சலுகைகளை பெறமுடியாத நிலையில் உள்ளனர். வறுமை நிலையை கருத்தில் கொண்டு அரசு பூஜாரிகளுக்கென நலவாரியம் அமைக்க முன்வரவேண்டும். பூஜாரிகளின் நலவாழ்வுக்காக யாகபூஜை நடத்தவும், ஒன்றிய பேரவை நிர்வாகிகள், குடும்பத்தினர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி தீர்மானங்களை விளக்கி பேசினார். உறுப்பினர் நீலகண்டன் நன்றி கூறினார்.