கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4114 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 4ம் தேதி துவங்கியது. நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தி, 108 வித மூலிகை பொருட்கல், பூ, கனி போன்றவைகளைக் கொண்டு யாகங்கள் வளர்த்தனர். நேற்று அதிகாலை 3:45 மணிக்கு சுப்ரபாதத்துடன் துவங்கி நான்காம் கால யாகம், மூலமந்திர ஜெய பாராயணம், ஜெயாதி ஹோமம், மற்றும் மகாபூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடந்தது.தொடர்ந்து காலை 7:00 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கும், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் புனிதநீரூற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பால் குட ஊர்வலம், மகா அபிஷேகம், சுவாமிக்கு சர்வ அலங்காரமும் நடந்தது.