உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜர் சிலைக்கு கும்பாபிஷேகம்

நடராஜர் சிலைக்கு கும்பாபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: வீரட்டானேஸ்வரர் கோவிலில், நடராஜர் மற்றும் மாணிக்கவாசகர் சிலைகளுக்கு, நாளை மறுதினம் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வீராணத்துார் ஞானாம்பிகை உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில், 1300 ஆண்டுகள் பழமையானது. கடந்த, 2005ல் கோவில் சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. வானுயர்ந்த மரங்களுக்கு இடையே, வீரட்டானேஸ்வரர், ஞானாம்பிகைக்கு தனித்தனி சன்னிதி அமைந்துள்ளது. அப்பர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும்சன்னிதிகள் அமைந்துள்ளன.நடராஜர் மற்றும் மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலைகள் புதிதாக, நாளை மறுதினம் கோவிலுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இதற்கான, யாகசாலை பூஜைகள் இன்று துவங்குகின்றன. நாளை மறுதினம் காலை 9:00 மணிக்கு, புதிய சிலைகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 8:00 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு நடராஜர், மாணிக்கவாசகர் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !