உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புட்டலம்மாள் ரேணுகாதேவி கோயில் கும்பாபிஷேகம்!

புட்டலம்மாள் ரேணுகாதேவி கோயில் கும்பாபிஷேகம்!

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் கம்மவார் வீமினியார் குலத்திற்கு பாத்தியப்பட்ட, புட்டலம்மாள் ரேணுகாதேவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம், இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடக்கிறது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன், கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்படுகிறது. ஜெயவிலாஸ் தொழில் அதிபர்கள் தினகரன், வரதராஜன் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !