உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிபீரப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம்!

கரிபீரப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம்!

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியை அடுத்த, சிவம்பட்டியில், ஸ்ரீ கரிபீரப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி, ஸ்ரீ கரிபீரப்ப சுவாமி, ஸ்ரீசம்ரோனியப்ப சுவாமி உள்ளிட்ட, 31 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலம் எடுத்து செல்லப்பட்டது.இதையடுத்து, விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த குருமன்ஸ் இனத்தை சேர்ந்தவர்கள், தங்களது கலாச்சாரப்படி, சேவை ஆட்டம், தலையில் தேங்காய் உடைப்பது உள்ளிட்டவை வழிபாடுகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !