உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் வரும் 9ல் கும்பாபிஷேகம்

அங்காளம்மன் கோவிலில் வரும் 9ல் கும்பாபிஷேகம்

ராசிபுரம்: ராசிபுரம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 9ம் தேதி நடக்கிறது. ராசிபுரம்-காட்டூர் சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், புதிதாக புனரமைக்கப்பட்டு, ராஜகோபுரம், அர்த்தமண்டபம், மூலஸ்தான கருவறை, ராஜகணபதி, வலம்புரி விநாயகர், பாலமுருகன் மற்றும் பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, இன்று (7ம் தேதி) காலை, 6 மணிக்கு மஹா துர்க்கா, மகாலட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட ஹோமம், பூர்ணாகுதி, மாலை, 3 மணிக்கு, கேரள செண்டை மேளத்துடன் காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், யானை, குதிரை, பசுமாடு முளைப்பாரி ஊர்வலம் வருதல், அம்மன் சக்தி அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.மாலை, 6 மணிக்கு யஜமான சங்கல்பம், அங்குரார்பணம், ரக்ஷபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசித்தல், பூர்ணாகுதி நடக்கிறது. நாளை (8ம் தேதி) காலை, 6 மணிக்கு, திருமுறை பாராயணம், வேதிகார்ச்சனை, புண்யாகவாசம், திரவியாஹூதி, மாலை, 5 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், வேதபாராயணம், இரவு, 7 மணிக்கு அங்காளம்மன் மூலவர் பிரதிஷ்டை செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 9ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு திருமுறைபாராயணம், வல்லபகணபதி பூஜையும், காலை 5.30 மணிக்கு மூலஸ்தான விமானம், ராஜகோபுரம் மற்றும் விநாயகர், பாலமுருகன், அங்காளம்மன், பேச்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை, 9 மணிக்கு அங்காளம்மன் ஸ்வாமி உள்ளிட்ட பரிவார ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடக்கிறது. மாலை, 5.30 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !