பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் சயனோற்சவ விழா!
ADDED :4113 days ago
ராசிபுரம்: பொன்வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை சயனோற்சவ விழா நடக்கிறது. ராசிபுரம், பாலதண்டாயுதபாணி பக்தர்கள் குழு சார்பில், பொன் வரதராஜ பெருமாள் கோவிலில், 26ம் ஆண்டு சயனோற்சவ விழா நாளை (8ம் தேதி) நடக்கிறது. காலை, 9.30 மணிக்கு ஸ்வாமி ராஜவீதி வழியாக, நகர் வலம் வருதல், பகல், 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. இரவு, 8 மணிக்கு சயனோற்சவம் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பாலதண்டாயுதபாணி பக்தர்கள் குழு செய்துள்ளனர்.