உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழக ஆயர்களின் கூட்டுப் பிரார்த்தனை!

தமிழக ஆயர்களின் கூட்டுப் பிரார்த்தனை!

சேலம்: தமிழக ஆயர்களின் கூட்டுப் பிரார்த்தனை, சேலத்தில் நேற்று நடந்தது. தமிழக ஆயர்கள் பேரவையின், ஆண்டுக் கூட்டம், நேற்று முதல், வரும், 10ம் தேதி வரை, ஏற்காட்டில் நடக்கிறது. அதற்கான துவக்க விழா, நான்கு ரோடு குழந்தை ஏசு பேராலயத்தில், நேற்று நடந்தது.விழாவில், சென்னை மயிலை உயர் மாவட்ட பேராயர் ஜார்ச் அந்தோனி, மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, புதுச்சேரி-கடலூர் பேராயர் ஆனந்தராயர், தர்மபுரி மறைமாவட்ட பேராயர் லாரன்ஸ் பயஸ், திண்டுக்கல் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி உள்ளிட்ட, 17 மாவட்டங்களை சேர்ந்த ஆயர்கள் கலந்து கொண்டனர்.அவர்களை, சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயன் வரவேற்றார். விழாவில், தமிழக ஆயர்கள் அனைவரும் இணைந்து, மறைமாவட்டத்தின் வளர்ச்சிக்காக, கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !