உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விட்டலாபுரம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

விட்டலாபுரம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

திண்டிவனம்: விட்டலாபுரம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.  6 ம் தேதி மாலை 4 மணிக்கு கணபதி பூஜையுடன்   யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு இரண்டாவது கால யாகசாலை பூஜைகள் பூர்ணாஹூதி  முடிந்து  10 மணிக்கு வரசித்தி  விநாயகர்  கோபுர கலசம் மற்றும் பாலமுருகன், நவகிரஹ சன்னதிகளுக்கு புனித கலசநீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் சிவாச்சாரியர்கள்  சந்திரசேகர், தயாளன், ரமேஷ், நடராஜ குருக்கள் பூஜைகளை செய்தனர். திண்டிவனம்  சேர்மன்  வெங்கடேசன்  உள்பட பலர்  கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !