ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் கோயிலில் மங்களாசாசனம்!
ADDED :4166 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் கோயிலில் ஆனி சுவாதி நட்சத்திரத்தை யொட்டி மங்களாசாசனம் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சன்னதியில் ஆனி சுவாதி திருவிழா, 28 ம் தேதி துவங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி மண்டகப்படி மண்டபங்களில் எழுந்தருளலும், மாலையில் சந்திரபிரபை, பறங்கி நாற்காலி உட்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று சுவாதி நட்சத்திரத்தையொட்டி காலையில் தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளலும், மங்களாசாசனமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.