உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜர் அபிஷேக மண்டப கும்பாபிஷேகம் கோலாகலம்!

நடராஜர் அபிஷேக மண்டப கும்பாபிஷேகம் கோலாகலம்!

ஆர்.கே.பேட்டை: ஞானாம்பிகை உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில், சிவகாமி உடனுறை நடராஜர் அபிஷேக மண்டபம் கும்பாபிஷேகம் ÷ நற்று நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகமும் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வீராணத்துாரில், 1300 ஆண்டுகள் பழமையான, வீரட்டா÷ னஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த, 2005ல் கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.  தற்போது கோவிலின் வடக்கு திசையில், சிவகாமி  உடனுறை நடராஜ பெருமான், அபிஷேக மண்டபம் கட்டப்பட்டு, அதில் ஐம்பொன் சிலைகள் நேற்று நிறுவப்பட்டன. மண்டப கோபுரத்திற்கு நேற்று  காலை 9:00 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது.  பின், சிவகாமி, நடராஜர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட சிலைகளுக்கும் புனிதநீர் ஊற்றி அபி÷ ஷகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், வீராணத்துார், அய்யனேரி, கீழாண்ட மோட்டூர், சோளிங்கர், ஸ்ரீவிலாசபுரம்  உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6:00 மணியளவில் சிவகாமி உடனுறை நடராஜர் மற்றும்  மாணிக்கவாசகர், வாண வேடிக்கையுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !