உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முகாசபரூர் வரதராஜபெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்!

முகாசபரூர் வரதராஜபெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்!

மங்கலம்பேட்டை: முகாசபரூர் வரதராஜபெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம் நடந்தது. மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் வரதராஜபெரு மாள் கோவில் நான்காம் ஆண்டு வருஷாபிஷேக விழா, கடந்த 3ம் தேதி துவங்கியது. இதையொட்டி தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு திரு மஞ்சனம், அலங்காரம், இரவு தீபாராதனை நடந்தது. வருஷாபிஷேக நிறைவு நாளான நேற்று (9ம் தேதி) காலை 10:00 மணியளவில் சுதர்சன ÷ ஹாமம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு திருமஞ்சனம், தீபாராதனை, இரவு 7:30 மணிக்கு  நந்தகிருஷ்ணன் பெருமாள் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !