ஜெகந்நாத பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம்!
ADDED :4128 days ago
திருமழிசை : திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது. திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதன்பின், 8ம் தேதி கருடசேவையும், அன்று மாலை அனுமந்த் வாகனத்திலும், 9ம் தேதி காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும் நடந்தது. நேற்று காலை மோகினி அவதாரமும், மாலை சிம்ம வாகனத்தில் வீதி உலாவும் நடந்தது. இன்று காலை, சூர்ணாபிஷேகமும், மாலை தங்க தோளுக்கினியான் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை காலை 8:00 மணிக்கு மேல், 18 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட தேரில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் ஜெகந்நாத பெருமாள் எழுந்தருளி, தேரோட்டம் நடைபெறும். அதன்பின், மாலை மாடவீதி உற்சவமும் நடக்க உள்ளது.