உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகப்பெருமான் உருவப்படத்துடன் சென்டெக்ஸ் மூலம் திரைச்சீலை வெளியீடு!

முருகப்பெருமான் உருவப்படத்துடன் சென்டெக்ஸ் மூலம் திரைச்சீலை வெளியீடு!

சென்னிமலை: சென்னிமலை சென்டெக்ஸ் கைத்தறி கூட்டுறவு நிறுவனம் சார்பில், சென்னிமலை முருகன் உருவம் பொறித்த, புதிய திரைச்சீலை ரகத்தை அறிமுகம் செய்துள்ளனர். சென்னிமலையில் செயல்படும் சென்டெக்ஸ் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின், கைத்தறி துணி வடிவமைப்பாளர் அப்புசாமி, பல துறைகளில் சாதனை படைத்தவர்களின் உருவங்களை, பெட்ஷீட்களில் பொறித்துள்ளார். அப்துல் கலாம், சச்சின் தெண்டுல்கர், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்ற பிரபலங்களின் உருவப்படங்களை வடிவமைத்து, பாராட்டை பெற்றவர். தற்போது, சென்னிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முருகப்பெருமான் உருவப்படத்தையும், ‘சென்னிமலை ஆண்டவர்’ என்ற எழுத்துகளுடன், ஜக்காடு கைத்தறி திரைச்சீலையில் டிசைன் செய்து, நெசவு செய்துள்ளார். இந்த திரைச்சீலை, அனைவரும் விரும்பும் வண்ணம் வடிவமைத்துள்ளார். இதை நெசவு செய்ய, பாவுக்கு, 2க்கு, 17ம் நெம்பர் நூலும், ஊடைக்கு, 2க்கு, 30ம் நெம்பர் நூலும் பயன்படுத்தி உள்ளார். 520 ஜக்காடு அட்டைகளை கொண்டு, ஒரு வாரம், இதை நெசவு செய்து, விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை, 450 ரூபாயாகும். இந்த புதிய திரைச்சீலை, 60 இன்ச் அகலமும், 90 இன்ச் நீளம் கொண்டதாகும். வடிவமைப்பாளர் அப்புசாமியை, சென்டெக்ஸ் தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் பழனியப்பன், மேலாண்மை இயக்குனர் சிவசூரியன், மேலாளர் ஆறுமுகம் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !