சோழவாண்டியபுரம் கோவில் தேர் திருவிழா
ADDED :4106 days ago
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த சோழவாண்டியபுரம், மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த சோழவாண்டியபுரம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சுவாமி வீதியுலா மற்றும் வாணவேடிக்கையுடன் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 2 மணிக்கு காத்தவராயன் கழுமரம் ஏறும் வைபவம் நடந்தது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், காளி கோட்டை இடித்தல் உள்ளிட்ட சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்துச் சென்றனர். மாலை 6 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.