உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேஷம்: ( அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பிள்ளைகளால் பெருமை!

மேஷம்: ( அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) பிள்ளைகளால் பெருமை!

உழைப்பால் உயர்ந்திடும் மேஷ ராசி அன்பர்களே!

ராகு, சுக்கிரன் ஆகியோரால் நன்மை அதிகரிக்கும். புதன் ஜூலை 24ல் இருந்து ஆக. 8 வரையிலும் நன்மை தருவார். நீண்ட நாள் பிரச்னை கூட படிப்படியாக மறையும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. சுக்கிரனால் குடும்பத்தில் வசதி அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை மறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபவிஷயத்தில் நல்ல செய்தி தேடி வரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை உருவாகும். உடல் நலம் சுமாராக இருக்கும்.  

தொழில், வியாபாரம் வளர்முகமாக இருக்கும்.  ஜூலை 23 க்கு பிறகு அரசின் வகையில் இருந்த தடையூறு கள் மறையும். அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ஆக. 8 க்குப் பிறகு குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற் படலாம். பணியாளர்களுக்கு ஜூலை 23ல் புதன் சாதகமான இடத்திற்கு வருவதால் வேலையில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மாத இறுதியில் விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

கலைஞர்கள் சிறப்பான பலனை பெறலாம் புகழ் பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல் வாதிகள் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெறுவர்.  மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தை காணலாம். மதிப்பெண் அதிகரிக்கத் தொடங்கும்.

விவசாயிகளுக்கு வருமானம் உயரும். பூமிக்கு அடியில் விளையும் அனைத்து பொருள்களும் நல்ல மகசூலைத் தரும். கால்நடை மூலம் வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்க வாய்ப்பில்லை.

பெண்கள் நிறைவான மனநிலையுடன் இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

நல்ல நாள்: ஜூலை19, 20, 21, 24, 25, 31 ஆக.1, 2, 3, 4, 9, 10,11, 12, 13

கவன நாள்: ஆக. 5, 6

அதிர்ஷ்ட எண்: 5, 7       நிறம்: வெள்ளை, நீலம்

வழிபாடு: தினமும் நரசிம்மர் வழிபாடு நடத்துங்கள். காலையில் சூரியனை வணங்குங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !