உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அமோக லாபம்!

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அமோக லாபம்!

உள்ள உறுதி மிக்க சிம்ம ராசி அன்பர்களே!

புதன் ஜூலை 23 வரையிலும், சுக்கிரன்ஆக. 8 வரையிலும் நற்பலன் வழங்குவர். செவ்வாய் சனி மாதம் முழுவதும் சாதகமாக நின்று நன்மையை அள்ளிக் கொடுப்பார்கள். அவர்களால் செயலில் வெற்றி, பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் வளர்ச்சி உண்டாகும். கையில் பணப்புழக்கத்துக்கு எந்தக் குறையும் இருக்காது. சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத் தேவை பூர்த்தி யாகும்.குடும்பத்தில் பக்தி சிந்தனை மேம்படும். அடிக்கடி சொந்த பந்தம் வீட்டுக்கு வருகை புரிவர். பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு
மகிழ்ச்சியளிக்கும். பெண்களால் உதவி அதிகமாக கிடைக்கும். சுபவிஷயத்தில் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவு குறையும்.

தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்களை காணலாம். அமோக லாபம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். ஜூலை 23க்கு பிறகு எதிரிகளின் இடையூறு வரலாம்.

பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட இப்போது உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். ஆக. 8க்கு பிறகு இடமாற்றம் ஏற்படலாம். அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும்.

கலைஞர்கள் வளர்ச்சிப்பாதையில் செல்வர். புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறலாம்.

அரசியல்வாதிகளுக்கு  உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

மாணவர்கள் அக்கறை கொண்டு படிப்பது நல்லது. ஆசிரியர் அறிவுரையை ஏற்பது நல்லது.

 விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். விளைச்சல் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்க உகந்த நேரம். கால்நடை வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர்.ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். அண்டை வீட்டார் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

நல்ல நாள்: ஜூலை 22,23,24,25,29,30 ஆக. 3,4,9,10,11,12,13

கவன நாள்: ஜூலை 17,18 ஆக. 14,15

அதிர்ஷ்ட எண்: 1,9                        நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: விநாயகர், சிவன் கோவிலுக்குச் செல்லுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்வதோடு, பசுவுக்கும் கன்றுக்கும் பசுந்தழை போடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !