உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம்) முயற்சியில் வெற்றி!

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம்) முயற்சியில் வெற்றி!

பெருந்தன்மையுடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!

சனி, செவ்வாய் நற்பலனை கொடுப்பார்கள். புதன் ஜூலை 23 முதல் ஆக. 8 வரையும், அதன் பின் சுக்கிரனும் சாதகமாக நின்று நன்மைஅளிப்பர்.செவ்வாயால் செயலில் முன்னேற்றம் உண்டாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதனால் 23-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு சிறப்பாக இருக்கும். குடும்பம் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதன் ஜூலை 23ல் சாதகமான இடத்துக்கு வருவதால் பிரச்னை மறைந்து குடும்ப ஒற்றுமை பலப்படும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் பெறுவர். உடல்நிலை சீராக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கவாய்ப்பில்லை.  வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பெண்கள் வகையில் தொல்லை உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆக.8க்கு பிறகு நிலைமை சீராகி நன்மை பெருகும்.

பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். தடைபட்டு வந்த பதவி உயர்வு இனி கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை விஷயமாக பிரிந்தவர்கள் குடும்பத்தோடு ஒன்று சேருவர்.

கலைஞர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும். முயற்சி எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும். மாத பிற்பகுதியில் நிலைமை சீராகும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். தலைமையின் ஆதரவு கிட்டும்.  மாணவர்களுக்கு பின் தங்கிய நிலை மாறும். பாடம் எளிதில் புரியும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். நெல், கேழ்வரகு, பச்சை காய்கறிகள், பழவகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் அனைவரின் நன்மதிப்பையும் பெறுவர். அடிக்கடி விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: ஜூலை 1,2,3,4,7,8,12,13, ஆக. 22,23,24,25,31

கவன நாள்: ஜூலை 26,27,28

அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: சிவப்பு, கறுப்பு

வழிபாடு: காலையில் சூரியனை தரிசியுங்கள்.  ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நன்மையளிக்கும். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !