உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்பாதியில் தீ மிதி திருவிழா!

தென்பாதியில் தீ மிதி திருவிழா!

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த தென்பாதி திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது. கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 7 நாட்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மேலும், அம்மன் பிறப்பு,  வில்வளைப்பு, திருக்கல்யாணம்  உள்ளிட்ட உற்சவங்களும், ஜெயங்கொண்டம் சிட்டிபாபு குழுவினரின் மகாபாரத கதைப்பாட்டு நிகழ்ச்சியும்  நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு வீராணம் ஏரிக்கரையில் சக்தி கரக அலங்கார பூஜை துவங்கியது. தொடர்ந்து, அம்மன் கரக வீதியுலாவும் 6:30 மணிக்கு தீ மிதி திருவிழாவும் நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் திரளான  பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !