ராம அனுமன் கோவிலில் சிறப்பு யாகம்!
ADDED :4106 days ago
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ஸ்ரீராம அனுமன் கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூரில் உள்ள ராம அனுமான் கோவிலில் நேற்று முன்தினம் அனுமான் பிறந்த மூல நட்சத்திரத்தில் சிறப்பு யாகம், சிறப்பு பூஜை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பு.முட்லூரைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராம அனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளை நிறுவனர் சீனு என்கிற ராமதாஸ் செய்திருந்தார்.