உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜ பெருமாள் கோவிலில் துவாரபாலர்கள் சிலை பிரதிஷ்டை!

சுந்தரராஜ பெருமாள் கோவிலில் துவாரபாலர்கள் சிலை பிரதிஷ்டை!

ஆர்.கே.பேட்டை: சுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை, துவாரபாலர்கள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று, கொடிமரம் பி ரதிஷ்டை செய்யப்படுகிறது. ஆர்.கே.பேட்டை, சுந்தர ராஜ பெருமாள் கோவில், 500 ஆண்டுகள் பழமையானது. கடந்த, 1987ல் கோவில் சீரமைக்க ப்பட்டு, கும்பாபிஷேகம்  நடந்தது. சித்திரை பிரம்மோற்சவம், மார்கழி உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய கொடிமரம்  பிரதிஷ்டை செய்யும் பணி, கடந்த ஓராண்டாக நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று காலை 6:00 மணிக்கு, புதிய கொடிமரம்  பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை மூலஸ்தானம் முன்பாக, துவாரபாலர்கள் கற்சிலைகள், புதிதாக பிரதிஷ்டை செய்யப் பட்டன. முன்னதாக, புதிய சிலைகள் கரிக்கோலம் வந்தன. கோவில் முன்மண்டபத் தில், வேதமந்திரங்கள் ஓத, சிறப்பு பூஜை நடந்தது. காலை 11:00  மணியளவில், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !