உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயணர் மகா சிரவண தீபம்

லட்சுமி நாராயணர் மகா சிரவண தீபம்

விழுப்புரம்: ப.வில்லியனுõர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிரவண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுõர்  லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கடந்த 13ம் தேதி மதியம் 1:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் கனகவல்லி தாயாரோடு, பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் 5:30 மணிக்கு மகா சிரவண தீபம் ஏற்றப்பட்டது. ஏற்பாடுகளை பத்ரி பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !