ஸ்ரீரங்கத்தில் 18ம் தேதி சீதா கல்யாண மகோத்சவம்!
ADDED :4157 days ago
திருச்சி: ஸ்ரீரங்கத்தில், வரும், 18ம் தேதி, சீதா கல்யாண மகோத்சவம் துவங்குகிறது. ஸ்ரீரங்கம், யோகா திருமண மண்டபத்தில் முதல் நாள் (18ம் தேதி) காலை கணபதி ஹோமத்துடன் தொடக்க விழா நடக்கிறது. காலை, 10.15 மணிக்கு, குத்துவிளக்கு பூஜை, பகல்,1 மணி முதல் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து, திவ்யநாம சங்கீர்த்தனம், டோலாத்சவம் நடைபெறும். மறுநாள் காலை விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், தொடர்ந்து ஏகதின லட்சார்ச்சனை, குருத்யானம், அஷ்டபதி பஜனை நடைபெறும். மதியம், 1 முதல் கலை நிகழ்ச்சிகளும், 7 மணிக்கு, திவ்யநாம சங்கீர்த்தனம் மற்றும் டோலோத்சவம் நடைபெறும். வரும், 20ம் தேதி, கூட்டு பிரார்த்தனையும், சீதாராம கல்யாணம் திருமாங்கல்ய தாரணம் நடைபெறும். நிறைவாக, ஆஞ்சநேய உற்சவமும் நடைபெறும்.