மூலவர் தட்சிணாமூர்த்தி
ADDED :5304 days ago
தட்சிணாமூர்த்தியை மூலவராக கொண்ட கோயில், கேரள மாநிலம் ஆலப்புழை அருகேயுள்ள சுகபுரத்தில் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள மூலவரின் மீது தான், ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகம் இயற்றினார். சுகப்பிரம்ம மகரிஷிக்கு தட்சிணாமூர்த்தி ஞானஉபதேசம் செய்தது இந்த இடத்தில் தான் என தல புராணம் கூறுகிறது. தமிழகத்தில் சென்னை திருவான்மியூரில் தெட்சிணாமூர்த்தியை மூலவராகக் கொண்ட தனிக்கோயில் இருக்கிறது. இந்த தெட்சிணாமூர்த்தியே தமிழகத்தில் மிக உயரமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.