உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசிக்கு யாத்திரை ரயில் ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு!

காசிக்கு யாத்திரை ரயில் ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு!

மதுரை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) ஆடி அமாவாசையையொட்டி, காசிக்கு யாத்திரை ரயில் இயக்குகிறது. பெங்களூருவில் ஜூலை 23ல் இந்த முழுநீள ஏசி யாத்திரை ரயில் புறப்படுகிறது. சென்னை சென்ட்ரல், விஜயவாடா வழியாக ரயில் செல்கிறது. எட்டு நாட்களுக்கான யாத்திரை ரயில் கட்டணம் ரூ. 23, 949லிருந்து துவங்குகிறது.பயணிகள் வசதிக்காக லக்சரி(முதல் வகுப்பு ஏசி), டீலக்ஸ் (இரண்டடுக்கு ஏசி), கம்பர்ட் (மூன்றடுக்கு ஏசி) வகுப்புகள் உள்ளன.காசி சோமாவார சிவதரிசனம், ஆயில்ய நட்சத்திர சர்ப்ப தோஷ பூஜை, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம். விவரங்களுக்கு: 0452-234 5757.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !