உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழு கோவில்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்திட பாலாலயம்!

ஏழு கோவில்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்திட பாலாலயம்!

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏழு கோவில் களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்திட பாலாலய விழா நேற்று  நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் சுமூககணபதி, அய்யப்பன்,  அஷ்டலட்சுமி, காசிவிஸ்வநாதர் உள்ளிட்ட ஏழு கோவில்கள் உள் ளது. இக்கோவில்களை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த நிர்வாகக்குழுவில்  திட்டமிடப்பட்டது. நேற்று காலை 9:40 மணிக்கு யாகபூஜைகள் நடத்தப்பட்டு அத்திமரப்பலகையில் அனைத்து கோவில்களின் சுவாமிகள் பாலாலய  பிரதிஷ்டை செய் யப்பட்டது. கும்பாபிஷேகம் 3 மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநில சர்க்கரை இணைய தலைவர் ஞானமூர்த்தி,  ஆலையின் மேலாண்மை இயக்குனர் அன்பரசு, துணைத் தலைவர் சிவக்குமார், முதுநிலைமேலாளர் மனோகரன், கரும்பு பெருக்கு அலுவலர்  பாண்டியன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் குமார், சேகர், பழனிவேல், அஜய்குமார், ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !