முத்துமாரியம்மன் கோவிலில் உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை!
ADDED :4104 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் 5 உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி தேர் திருவிழா துவங்கவுள்ளது. இதையொட்டி விநாயகர், காத்தவராயன், ஆரியமாலா, கருப்பழகி, பரசுராமர் உற்சவர் சிலைகள் சுவாமி மலையிலிருந்து கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் மாலை உற்சவர் பிரதிஷ்டை வைபவம் துவங்கியது. நேற்று காலை சிறப்பு பூஜை, யாகங்களுக்கு பின் உற்சவர் சிலைகளுக்கு அபிஷேகங்கள் நடத்தினர். மகா தீபாரதனை காண்பித்தனர். மாலை 6 மணிக்கு தேர் திருவிழாவிற்கான பூ போடுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை அறங்காவலர் நற்குணம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். அம்பி கேஸ்வரன், குருமூர்த்தி தலைமையிலான ஏழு சிவாச்சாரியார்கள் வைபவத்தை நடத்தி வைத்தனர்.