உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமந்தூர் பெரியாயி கோவில் கும்பாபிஷேகம்!

மாமந்தூர் பெரியாயி கோவில் கும்பாபிஷேகம்!

திருவெண்ணெய்நல்லூர்: மாமந்தூர் கிராமத்தில் பெரியாயி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 15ம் தேதி காலை 10:00 மணிக்கு கணபதி ÷ ஹாமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. இரவு 7:00 மணிக்கு முதல்கால பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 4:30 மணிக்கு  இரண்டாம் கால பூஜை, காலை  மகா பூர்ணாஹூதியும் நடந்தது. காலை 7:20 மணிக்கு கடம் புறப்பாடாகி ரவிச்சந்திரன் ரெட்டியார் தலைமையில்  கும்பாபிஷேகம் நடந்தது. சர்வசாதகத்தை அழகர்சிவம் செய்தார். ஏற்பாடுகளை தேவநாதன், பாலகிருஷ்ணன், ஜோதி, ராமமூர்த்தி, ஜெயச்சந்திரன்  உட்பட பலர்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !