வீணை இல்லாத கலைமகள்
ADDED :5304 days ago
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் கலைமகள் வீணையின்றி காணப்படுகிறார். ஒரு முறை கலைமகளுக்கும் இத்தல வேதநாயகி அம்மனுக்கும் நடைபெற்ற போட்டியில் வீணையின் நாதத்தை விட அம்மனின் குரல் இனிமையாக இருந்ததால் அம்மன் வெற்றி பெற்றாள். எனவே, அவரது பெயர் யாழைப்பழித்த மென்மொழியம்மை என்பதாகும்.