உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம்!

அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம்!

வாலாஜாபாத் : கோவிந்தவாடி அகரம் திரவுபதி அம்மன் கோவில், அக்னி வசந்த உற்சவ விழாவில், நேற்று துரியோதனன் படுகளம் நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவ விழா, கடந்த 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.இதை தொடர்ந்து காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. பிற்பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில், மகாபாரத சொற்பொழிவும்; இரவு, நாடகமும் நடந்தது. கடந்த 10ம் தேதி, வில்வளைப்புடன் நாடகம் துவங்கி, நேற்று முன்தினம் இரவு, கர்ண மோட்சமும்; அதை தொடர்ந்து, நேற்று காலை, 10:00 மணியளவில், துரியோதனன் படுகளம் நடந்தது.இதை தொடர்ந்து படுநெல்லி, கோவிந்தவாடி அகரம், ஊவேரிசத்திரம் ஆகிய கிராமவாசிகள், பொங்கலிட்டு வழிபட்டனர். மாலையில், தீ மிதி திருவிழா நடந்தது.இந்த படுகளத்தை முன்னிட்டு, கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சார்பில், துரியோதனனுக்கு கண்ணீர் அஞ்சலி விளம்பர சுவரொட்டிகள் ஒட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !