ராமநாதபுரம் நந்தி சிலை கண்டெடுப்பு!
ADDED :4153 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காரான் படைவெட்டி வலசையில் டெலிபோன் "கேபிள் ஒயர்
பதிக்கும் பணியில் நேற்று காலை தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சீனிவாசன் என்பவரது நிலம் அருகே குழி தோண்டியபோது, இரண்டரை அடி உயர நந்தி கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. அச்சிலையை, காரான் வி.ஏ.ஓ., நாகராஜன் கைப்பற்றி ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார்.