மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோயிலில் இன்று ஆடி கிருத்திகை!
ADDED :4153 days ago
மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன. விழாவில் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், செஞ்சி, திண்டிவனம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் செய்துள்ளனர்.