உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா தொடக்கம்!

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா தொடக்கம்!

பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருவிழாக்கள் நடைபெறுவது தனிச் சிறப்பாக அமைந்துள்ளது.இதில் பிரமோற்சவம், ஆடிப்பூரம், அப்பர் திருவிழா, மாணிக்கவாசகர் திருவிழா, வசந்த உற்சவம் என இவை அனைத்தும் 10 நாள்கள் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது.இதில், வைகாசி பிரம்மோற்சவம் மற்றும் ஆடிப்பூர விழா மிகச் சிறப்புடையது.இந்தாண்டு ஆடிப்பூர விழா திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இது அம்பாளின் பெரும் திருவிழாவாகும், 9ஆம் நாள் அம்பாள் மாட வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 10 நாள்கள் அம்பாளுக்கு நடக்கும் வளைகாப்பு உற்சவம்
சிறப்பானதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !