சிதம்பரத்தில் தீமிதி உற்சவம்!
ADDED :4361 days ago
சிதம்பரம்: சிதம்பரத்தில் வல்லபி மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். உற்சவத்தையொட்டி, கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, மாரியம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனையும், அம்மன் வீதியுலாவும் நடந்தது. முக்கிய விழாவான நேற்று முன்தினம் மாலை தீமிதி உற்சவம் நடந்தது.இதனையெ õட்டி வல்லபி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காலை 10:00 மணிக்கு சோதனை கரகம் எடுத்து அலகு போட்டு பக்தர்கள் வேண்டுதல் காணிக்கை செலுத்தினர். 11:00 மணிக்கு காவடி எடுத்தலும், மதியம் 2:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று மாலை 6:30 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.