வைத்தியநாத சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4206 days ago
திட்டக்குடி: திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் நாடு நலம் பெறவும், மழை வேண்டியும், கும்பாபிஷேகம் சிறப் பாக நடைபெறவும் வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.