அங்காள பரமேஸ்வரி கோவிலில் 3ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை!
ADDED :4093 days ago
புதுச்சேரி: அங்காள பரமேஸ்வரி கோவிலில், 33ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை, வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரி சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், 33ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை, வரும் ஆகஸ்ட் 3ம் தேதி காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன், கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய குருக்கள் மற்றும் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.